Tuesday, September 28, 2010

விமர்சிக்கும் உலகம் இது

பட்டினத்தார் எத்தனை பெரிய துறவி? கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டுவிட்டுக் கோவணத்துடன்வெளியேறிய கடுந்துறவி. சோற்றாசை கூட இல்லாத சந்யாஸி. கையில் ஓடு வைத்திருந்த பத்திரிகிரியாரைத் சொத்துவைத்திருக்கும் குடும்பஸ்தன் என்று கிண்டலடித்த அப்பழுக்கற்ற துறவி. அவரையே உலகம் என்ன பாடுபடுத்தியதுதெரியுமா?

நடந்த களைப்பால் வயலில் படுத்திருந்தார் பட்டினத்தார். அறுவடை நடந்திருந்த வயல் அது. குச்சி குச்சியாய்ப் பூமியில்இருந்து கிளம்பி அறுபடாதிருந்த வைக்கோல் அவர் உடம்பில் குத்திக் கொண்டிருந்தது. அதைச் சட்டை செய்யாமல் (சட்டைஇல்லாமல்) படுத்துக் கிடந்தார். இருக்கும் போதே இறந்து போன மாதிரி இருந்தார்.

அந்த வழியாகப் போன இரண்டு பெண்கள் வரப்பு வழியாக நடந்து போக முடியாதபடி பட்டினத்தார் வரப்பு மீதுதலைவைத்துப் படுத்திருந்தார். ஒரு பெண்மணி, “யாரோ மகானா!” என்று அவரை வணங்கி வரப்பிலிருந்து இறங்கிநடந்தார். மற்றொரு பெண்மணியோ, ஆமாம்ஆமாம்இவரு பெரிய சாமியாராக்கும்தலையணை வைச்சுத்தூங்கறான் பாருஆசை பிடிச்சவன் என்று கடுஞ்சொல் வீசினார். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்தபட்டினத்தார், “ஆஹாநமக்கு இந்த அறிவு இது நாள் வரை இல்லையேஎன்று வருந்தி வரப்பிலிருந்து தலையைக் கீழேவைத்துப் படுத்தார்.

சற்று நேரத்தில் அந்த இரண்டு பெண்களும் அதே வழியாகத் திரும்பி வந்தனர். வரப்பிலிருந்து தலையை இறக்கிக் கீழேவைத்திருந்த பட்டினத்தாரைப் பார்த்து முதல் பெண் பரிதாபப்பட்டு, “பார்த்தாயாநீ சொன்னதைக் கேட்டு உடனே கீழேஇறங்கிப் படுத்துட்டாரூஇப்பவாவது ஒத்துக்கோஇவரு மகான்தானே…! என்றார். அந்த பெண்மணியோ, தனக்கேஉரித்த பாணியில் அடி போடிஇவனெல்லாம் ஒரு சாமியாரா? தன்னைப் பத்தி யார் யாரு என்ன என்னபேசுறாங்கன்னு ஒட்டுக் கேட்கிறான்அதைப் பத்திக் கவலைப்படறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?” என்றுஒரு வெட்டு வெட்டினாள். பட்டினத்தாருக்குத் தலை சுற்றியது.

எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும். இது பேருண்மை. தரமானவர்களின் தரமான விமர்சனத்தைமதிக்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்கிற வெறியுடன் விமர்சிக்கிறவர்கள் விமர்சனத்தைப்புறக்கணியுங்கள்!!!


Thursday, November 13, 2008

பெண்-சாதனையின் சரித்திரம் ...!!!

ஆண்கள் தம் மடமையினால்
பெண்களை நாம் அடக்கி ஆண்டோம் ,
வேதங்கள் கற்று தராமல்
விவாதங்களில் இடம் மறுத்தோம் ,
சமையல் அறைகளையும் ,
படுக்கை அறைகளையும் -
உலக வரை படமாய் உவந்து தந்தோம் ,
மங்கையர்களின் அறியாமை கொண்டு
ஆண்மையின் ஆயுதம் செய்தோம் ,

ஆயினும்
கவனித்து கண்டீரோ பெண்ணை ???
ஏசினோரையும்,
புறம் பேசினோரையும்
பின் தள்ளி
வீரத்திற்கு வீற்றாய்
அரியணை கண்டாள் 'பெண்',

சுதந்திர தாகத்திற்காய்
சொந்த உதிரங்களை
மண்ணடி சிந்தினாள் 'பெண்'!

தேசத்தின் மந்திரி ஆனவள்
காவலனின் குண்டுகளுக்காய்
சந்தன கட்டைகள் இடையே
தீக்கு இரை ஆனாள் 'பெண்'!

இந்தியனின் பெருமைக்காய் ,
வான் வெளி ஆராய்ச்சிக்காய்
நாசாவில் மரணம் கொண்டாள் 'பெண்'!

மென்மை தரித்தவள் என்பதாலோ
மென் பொருட்களின் களத்தில்
மேன்மை கொண்டிருக்கிறாள் 'பெண்'!

இயந்திர ஆண்களுக்காய்
இதயங்களை வருடி கொடுக்கிறாள் 'பெண்'!

தாயாக,தமக்கையாக,
தோழியாக,துணைவியாக
சாதனைகளை மறந்தும் துறந்தும்
சரித்திரமாய் தான் வாழ்கிறாள் 'பெண்'!

ஆனாலும் பார்த்தீரோ ...
இந்த ஆண் கவியின் பேனாவின்
அடைப்பு குறிக்குள்ளே தான் 'பெண்'!!!!

பெண் அடிமைத்தனம் ஒழிப்போம்
மாற்றுவோம் மாற்றிடுவோம் !!!!

என் காதல் ...


இரு கண்கள் நான்கு இமைகள் ...
பத்து விரல்கள் நான்கு கைகள்...
ஒரு இதயம் இரு துடிப்பு...
என் காதல்... நானுமாய்..