Thursday, November 13, 2008

பெண்-சாதனையின் சரித்திரம் ...!!!

ஆண்கள் தம் மடமையினால்
பெண்களை நாம் அடக்கி ஆண்டோம் ,
வேதங்கள் கற்று தராமல்
விவாதங்களில் இடம் மறுத்தோம் ,
சமையல் அறைகளையும் ,
படுக்கை அறைகளையும் -
உலக வரை படமாய் உவந்து தந்தோம் ,
மங்கையர்களின் அறியாமை கொண்டு
ஆண்மையின் ஆயுதம் செய்தோம் ,

ஆயினும்
கவனித்து கண்டீரோ பெண்ணை ???
ஏசினோரையும்,
புறம் பேசினோரையும்
பின் தள்ளி
வீரத்திற்கு வீற்றாய்
அரியணை கண்டாள் 'பெண்',

சுதந்திர தாகத்திற்காய்
சொந்த உதிரங்களை
மண்ணடி சிந்தினாள் 'பெண்'!

தேசத்தின் மந்திரி ஆனவள்
காவலனின் குண்டுகளுக்காய்
சந்தன கட்டைகள் இடையே
தீக்கு இரை ஆனாள் 'பெண்'!

இந்தியனின் பெருமைக்காய் ,
வான் வெளி ஆராய்ச்சிக்காய்
நாசாவில் மரணம் கொண்டாள் 'பெண்'!

மென்மை தரித்தவள் என்பதாலோ
மென் பொருட்களின் களத்தில்
மேன்மை கொண்டிருக்கிறாள் 'பெண்'!

இயந்திர ஆண்களுக்காய்
இதயங்களை வருடி கொடுக்கிறாள் 'பெண்'!

தாயாக,தமக்கையாக,
தோழியாக,துணைவியாக
சாதனைகளை மறந்தும் துறந்தும்
சரித்திரமாய் தான் வாழ்கிறாள் 'பெண்'!

ஆனாலும் பார்த்தீரோ ...
இந்த ஆண் கவியின் பேனாவின்
அடைப்பு குறிக்குள்ளே தான் 'பெண்'!!!!

பெண் அடிமைத்தனம் ஒழிப்போம்
மாற்றுவோம் மாற்றிடுவோம் !!!!

என் காதல் ...


இரு கண்கள் நான்கு இமைகள் ...
பத்து விரல்கள் நான்கு கைகள்...
ஒரு இதயம் இரு துடிப்பு...
என் காதல்... நானுமாய்..